திருத்துறைப்பூண்டி: தமிழ்நாடு அரசு சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் (ஓய்வு) மூத்த மனநல டாக்டர் செல்வராஜன் திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பகத்தை பார்வையிட்டார் பராமரிக்கப்படும் அனைத்து பதிவேடுகளையும் கோப்புகளையும் கேட்டறிந்து பார்வையிட்டார். மனநலம் பாதிக்கப்பட்டுள்ள ஆண்கள் பெண்கள் அழைத்து பேசி மனநல சிகிச்சை அளிக்கப்படும் விதம் போன்றவற்றை கேட்டறிந்தார் மனநல மருத்துவர் வாரம் ஒரு முறை வருகை புரிய கேட்டுக் கொள்ளுமாறு தெரிவித்தார். உள்நோயாளிகளில் வேறு ஏதேனும் மாற்றங்களோ, வித்தியாசம் தெரிய வந்தால் உடனே மனநல மருத்துவரிடம் தெரியப்படுத்தி விடுமாறு கூறினார். வேறு சாதாரணமான வியாதிகளோ, மாற்றங்களோ தெரிய வந்தால் அரசினர் மருத்துவமனைக்கு உடனே அளித்து செல்லுங்கள் என்று சொன்னார்.
மன நோயாளிகளிடம் பழகுதல் பேசுதல், கேட்டறிதல், உணவு அளித்தல் இவர்களின் கோப்புகளை எழுதுதல் நிர்வகித்தல் போன்றவற்றை விளக்கினார் மனநல நோயாளிகளை மீட்டெடுத்தல் கையாளுதல் மனநல சிகிச்சை அளித்தல் உணவளித்தல் சுத்தம் சுகாதாரமாக வைத்துக் கொள்ளுதல் இவை அனைத்தும் சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும் இருந்தும் அவர்களுக்கு சேவை செய்வதற்காகவே நாம் உள்ளோம் என்பதை உணர்ந்து அர்ப்பணிப்புடன் சிறப்பாக செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்தினார். ஆய்வின் போது, நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சௌந்தர்ராஜன் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.