எகிப்தில் பதப்படுத்தப்பட்ட 2,000 ஆட்டு கிடாய்களின் தலைகள் கண்டுபிடிப்பு

எகிப்தில், 2,000 ஆண்டுகளுக்கு முன் பதப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான ஆட்டு கிடாய்களின் தலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன் எகிப்தை ஆண்ட இரண்டாம் ராமேசஸ் மன்னருக்காக அபிடோஸ் (Abydos) நகரில் கட்டியெழுப்பப்பட்ட கோயிலில் நடைபெற்ற அகழ்வாய்வின்போது 2,000 ஆட்டு கிடாய்களின் தலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மன்னர் இரண்டாம் ராமேசஸின் மறைவுக்கு பின்னரும், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, கிடாய்கள், நாய்கள், மான்கள், மாடுகள் போன்றவற்றின் பதப்படுத்தப்பட்ட உடல்களை மக்கள் காணிக்கையாக படைத்துவந்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.