சென்னை: சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படுகிறது. சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். சென்னை பெருநகர மாநகராட்சியின் பட்ஜெட்டில் 70-க்கும் மேற்பட்ட புதிய அறிவிப்புகள் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.