உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் அற்புத பழம்!!

இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பித்தம் போக்கும் குணநலன், இளநிலையை சரிசெய்வது போன்ற அற்புத குணநலன்கள் கொண்ட பழம் குறித்து தெரியுமா?

இனிப்புடன் புளிப்பு சுவை கலந்த விளாம்பழம்தான் அது. தமிழர்களின் உணவுகளில் அன்று முதல் இன்று வரை விளாம்பழத்திற்கு முக்கிய இடம் உண்டு. சித்த மற்றும் ஆயுர்வேத வைத்தியத்தில் விளாம்பழம் அதிகம் பயன்படுத்தபடுகிறது.

நாம் தினசரி ஒரு விளாம்பழம் வீதம் தொடர்ந்து 21 நாட்களுக்கு இப்பழத்தை சாப்பிட்டு வந்தால் எந்த விதமான வியாதிகளும் நம்மை அண்டாது. அத்தனை அற்புத குணநலன்கள் விளாம்பழத்திற்கு உண்டு.

பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்குவது, காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், வாயில் கசப்பு, கை கால்களில் அதிக வேர்வை, இளநரை, நாவில் ருசி உணர்வு இல்லாதது இவை அனைத்தையும் விளாம்பழம் குணப்படுத்தும்.

ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை அழிக்கும் திறன் விளாம்பழத்திற்கு உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை ஏற்படுத்தும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு.

தினமும் குழந்தைகள் விளாம்பழம் சாப்பிட்டால் அவர்களது நினைவாற்றல் அதிகரிக்கும். விளாம் மரத்தின் இலையை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்துக் குடித்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

விளாம் மரத்தின் பிசினை அடிக்கடி சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகள் தீரும். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

உடல் வளர்ச்சி மற்றும் தசை வளர்ச்சி என இரண்டிற்குமே விளாம்பழம் மிகவும் நல்லது. தயிருடன் விளாம் காயை பச்சடிபோல் செய்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், குடல் அல்சர் நன்கு குணமடையும்.

வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசைந்து சாப்பிட்டு வந்தால் உடம்பில் நரம்புத் தளர்ச்சி குணமடையும். பனங்கற்கண்டுடன் விளாம்பழத்தை சாப்பிட, பித்தக் கோளாறுகளால் உண்டாகும் வாந்தி, தலைச் சுற்றல் தீரும்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.