பெலார்ஸ் நாட்டை அணு ஆயுதப் பணயக் கைதியாக ரஷ்யா வைத்து இருப்பதாக உக்ரைனின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் Oleksiy Danilov கருத்து தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் புதிய திட்டம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் சமீபத்திய அறிவிப்பில், ரஷ்யா தங்களது தந்திரோபாய அணு ஆயுதங்களை பெலாரஸில் நிலைநிறுத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் பெலாரிஸில் அணு ஆயுதங்களுக்கான சேமிப்பு அலகுகளை உருவாக்கும் பணி ஜூலை 1ம் திகதி நிறைவடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
AFP
இதற்கிடையில் உக்ரைன் பதற்றம் குறித்து பேசிய புடின், மேற்கத்திய நாடுகளே உக்ரைனில் நெருக்கடியை தூண்டுவதாகவும், அவர்களே மக்களின் தலைவிதியில் விளையாடுகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.
பணயக் கைதியாக பெலாரஸ்
இந்நிலையில் ரஷ்யா பெலாரஸை அணு ஆயுதப் பணயக் கைதியாக வைத்து இருப்பதாக உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ஒலெக்ஸி டானிலோவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்த கருத்தில், ரஷ்யா பெலாரஸில் அணு ஆயுதங்களை வைக்க விரும்புகிறது, இவ்வாறு அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவது என்பது பெலாரஸ் மீது கட்டுப்பாட்டை செலுத்துவதற்கான மூலோபாய நடவடிக்கைகளில் ஒன்று என குறிப்பிட்டார்.
EPA
அத்துடன் இந்த நடவடிக்கை நாட்டின் உள் ஸ்திரதன்மை பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், ரஷ்யா மீதும் புடின் மீதும் எதிர்மறையான எண்ணங்களை பெலாரஸ் மக்களிடையே அதிகரிக்கலாம் என்றும் டானிலோவ் தெரிவித்துள்ளார்.