புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்ததால் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
மெய்வழிச்சாலை கிராமத்தை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர் சாலை சக்கரபாணி என்பவருக்கு சொந்தமான 21 வயது ராமு என்கிற ஜல்லிக்கட்டுக்காளை உயிரிழந்தது.
காளையை குடும்பத்தில் ஒருவனாக பாவித்து தமிழ்நாட்டில் வளர்த்து வருவது வழக்கம். அதே போல், சாலை சக்கரபாணியும், அவரது மகன் சாலை கனகராஜூம் வளர்த்து வந்தனர்.
இந்த காலை, 2008 முதல் 2019 வரை ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பான காளை என்ற பெயரை பெற்றுள்ளது. பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் கவனம் ஈர்த்துள்ளது இறந்துபோன ராமு காளை.
தேனி அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருநல்லூர் ஜல்லிக்கட்டு, சிவகங்கை மாவட்டம் அரளிப்பாறை, கண்டிப்பட்டி, அமராவதிப்புதூர், மஞ்சுவிரட்டுகளில் சிறந்தகாளையாக விளையாடியுள்ளது.
கிராமத்திற்கும், மாவட்டத்திற்கும் பெயர் எடுத்துக் கொடுத்த காளை ராமு, முதுமை அடைந்த பிறகு அதை ஒரு குழந்தை போல் குடும்பத்தினர் பார்த்துக் கொண்டனர். தற்போது காளை ராமு உயிரிழந்ததால் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
ராமு காளையின் இறப்பு குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும், அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளத சாலை சக்கரபாணியின் மகன் சாலை கனகராஜ் கூறியுள்ளார். இறந்த காளையை ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.
newstm.in