எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
தமிழ் சினிமாவில் தனித்துமான கதைகளாக தேர்தெடுத்து நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமான விஷ்ணு விஷால் அதைத்தொடர்ந்து ஒரு சில வழக்கமான கதைகளை உடைய படங்களில் நடித்து வந்தார். ஆனால் அது அவருக்கு கைகொடுக்கவில்லை.
இதையடுத்து படத்தின் கதை தான் முக்கியம் என் உணர்ந்த விஷ்ணு விஷால் நீர்ப்பறவை, ஜீவா, இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் என தொடர்ந்து தரமான கதைக்களங்களை கொண்ட படங்களில் நடித்து வெற்றிகண்டார்.
AK62: AK62 படத்தை பற்றிய கேள்வி..காட்டமாக பதிலளித்த விக்னேஷ் சிவன்..!
=
நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் ஒரு சில படங்களை தயாரித்தார் விஷ்ணு விஷால். இதைத்தொடர்ந்து சில சறுக்கல்களை சந்தித்த விஷ்ணு விஷால் கடந்தாண்டு வெளியான FIR படத்தின் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பினார்.
இதையடுத்து சமீபத்தில் வெளியான கட்டா குஸ்தி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு விஷ்ணு விஷால் போட்ட ஒரு பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
நான் மறுபடியும் முயற்சி செய்தேன், மறுபடியும் தோற்றுவிட்டேன். நான் பாடம் கற்றுக்கொண்டேன். கடந்தமுறை தோல்வியடைந்தது என் தவறு இல்லை, அது துரோகம் என பதிவிட்டிருந்தார் விஷ்ணு விஷால்.
இந்த டிவீட்டை அடுத்து விஷ்ணு விஷால் தன் இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்யப்போவதாக வதந்திகள் பரவின. இந்நிலையில் இதற்கு தற்போது விஷ்ணு விஷால் விளக்கமளித்துள்ளார்.
அவர் பதிவிட்டவாறு, நான் professional விஷயமாக மட்டுமே அந்த பதிவை போட்டேன். அது பர்சனல் விஷயமான ட்வீட் கிடையாது. இதை சிலர் தவறாக புரிந்துகொண்டார்கள் என அவர் பதிவிட்டிருந்தார். இதையடுத்து ரசிகர்கள் சிலர் லால் சலாம் படத்தில் இயக்குனர் ஐஸ்வர்யாவுடன் ஏற்பட்ட மோதலினால் தான் இவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார் என புது கதையை கிளப்பி வருகின்றனர்.
சமீபகாலமாக இவருக்கும் ஐஸ்வர்யாவிற்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக லால் சலாம் படத்திலிருந்து விஷ்ணு விஷால் விலகவும் வாய்ப்புள்ளதாகவும் வதந்திகள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.