ரிசர்வ் வங்கி, ரெபோ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருப்பபது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு கூட்டம் ஏப்ரல் 3, 5 மற்றும் 6ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. ரிசர்வ் வங்கி ரஷ்ய – உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டு மே மாதம் முதல் ரெபோ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது.
2023-24ம் நிதியாண்டில் ரிசர்வ் வங்கி, 6 முறை பணக்கொள்கை குழு கூட்டத்தை கூட்டவுள்ளது. பிப்ரவரியில் நடந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கி, 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. இதனால் ரெபோ விகிதம் 6.50 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பாங்க் ஆஃப் பரோடாவின் தலைமைப் பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ், கடந்த 2 மாதங்களில் சில்லறை பணவீக்கம் 6.5 சதவீதம் மற்றும் 6.4 சதவீதமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
எனவேரிசர்வ் வங்கி மீண்டும் விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்துமென எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார். பிரிட்டன், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தி வருவதால், ரிசர்வ் வங்கியும் ரெபோ விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்
இதனால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in