இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திடம், “நாகப்பட்டினம் வந்த சசிகலா நிச்சயமாக ஓ பன்னீர்செல்வத்தை சந்திப்பேன், அனைவரையும் ஒன்றிணைத்து அதிமுகவை வலிமையான ஒரு கட்சியாக மாற்ற வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார். இது குறித்து உங்களுடைய கருத்து என்ன? என்று கேள்வி எழுப்பினர்.
இதற்க்கு பதிலளித்த ஓபிஎஸ் : ஆரம்பம் முதலில் நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் கழகம் முழுமையாக வெற்றி பெறும் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேளிவிகளுக்கு பதிலளித்த ஓபிஎஸ், “சாதாரண தொண்டன் கூட கழகத்தின் விதிப்படி உச்சபட்ச தலைவர் பதவிக்கு போட்டியிடலாம். ஆனால் அவர்கள் (இபிஎஸ்) விதியை மாற்றி, 10 மாவட்ட செயலாளர் முன்மொழிய வேண்டும், 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என்று விதியை திருத்தி இருக்கிறார்கள். அதைத்தான் நாங்கள் கூடாது என்கிறோம்.
கழகத்தினுடைய சட்ட விதிமுறைப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கும், ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர் புதுப்பிப்பதற்கும் கழகத்தினுடைய சட்ட விதி இருக்கிறது.
அந்த சட்ட விதிமுறைபடி, உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்ட பின்னால், கழகத்தினுடைய அமைப்பு ரீதியான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். ஜனநாயக முறை அனைவரும் வாக்களித்து ‘பெட்டி வைத்து’ நடக்க வேண்டும். அதைத்தான் நாங்கள் சொல்லி இருக்கிறோம்.
அப்படி செய்தால் உறுதியாக தொண்டர்கள் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்ற சூழ்நிலை உருவாகும். அந்த சூழ்நிலை தான் புரட்சித் தலைவர் காலத்தில் இருந்து. புரட்சித்தலைவி அம்மா காலம் வரை இருந்தது. அதை மாற்றி இருக்கிறார்கள். மாற்றக்கூடாது என்று சொல்லி வருகிறோம்” என்றார் ஓபிஎஸ்.