ரூ.7,092 கூடுதல் கட்டணம் | தமிழக அரசின் மறைமுக கட்டண வசூலா?! 

தமிழ்நாடு அரசின் 2023-2024ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பத்திரப்பதிவு கட்டணம் 4 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாக குறைத்துவிட்டதாக தமிழக அரசு அறிவித்தது.

அதே சமயத்தில், தமிழகத்தில் நிலத்தின் வழிகாட்டி மதிப்பை 33 சதவிகிதம் உயர்த்தியிருப்பதன் மூலம் அதிகப்படியான லாபத்தை ஈட்ட தமிழக அரசு திரட்டமிட்டு இருப்பதாக வி.கே சசிகலா உள்ளிட்டவர்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர்.

இதுகுறித்த தகவல்களின் அடிப்படையில், தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாக ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு சதுர அடி ரூ.666ஆக இருந்த வழிகாட்டு மதிப்பானது, இன்றைக்கு 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 

மேலும், சம்பந்தப்பட்ட நிலத்தின் வழிகாட்டு மதிப்பு சதுரஅடி ரூ.666ஆக இருந்தபோது, ஏற்கனவே இருந்த 4 சதவிகித பத்திரப்பதிவு கட்டணத்தின் அடிப்படையில் பத்திரப்பதிவுக்கு ஆகும் மொத்த செலவை கணக்கிட்டால் ரூ.31,912 அளவுக்கு செலவு ஆனது, 

ஆனால், இன்றைக்கு அதே சொத்தை பதிவு செய்ய வேண்டும் என்றால் உயர்த்தப்பட்ட வழிகாட்டு மதிப்பீட்டின் படி சதுரஅடி 1,000 ரூபாய்க்கு, தற்பொழுது 2 சதவிகிதமாக பத்திரப்பதிவுக் கட்டணத்தை குறைத்திருந்தாலும் பத்திரப்பதிவுக்கு ஆகும் மொத்த செலவினத்தை கணக்கிட்டால் ரூ.39,204 கட்டவேண்டியுள்ளது. அதாவது, ரூ.7,092 அளவுக்கு கூடுதலாக பத்திரப்பதிவுக்கு செலவிடவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், சிங்கநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ள நோரிஸ் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், “தமிழ்நாடு அரசு நிதி நிலை அறிக்கையில் தெரிவித்துள்ளபடி (TAMILNADU BUDJET 2023 அரசு வழிகாட்டி மதிப்புகள் 09.06.2017-க்கு முன்னர் இருந்தபடி மீண்டும் மாற உள்ளது.

இதன் மூலம் உதாரணமாக தற்பொழுது சதுரடி ரூ.67/- என்ற வழிகாட்டி மதிப்பு மீண்டும் சதுரடி அநேகமாக 01.04.2023 எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.100/- ஆக மாற உள்ளது. இந்த மாற்றம் முதல் நடைமுறைக்கு வரும் என்று

இது தொடர்பான வழிகாட்டி மதிப்புகள் திருத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பதிவு பொதுமக்கள் தற்பொழுதுள்ள வழிகாட்டி மதிப்பில் 31.03.2023 வரையிலும் பதிவு செய்யும் நல்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.