நெல்லை, கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்று பல்லை புடுங்கியதாக புகார் எழுந்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நெல்லை : கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்ல பட்ட மூவரில் ஒரு இளைஞரை, போலீஸ் அதிகாரி ஏஎஸ்பி பல்வீர் சிங் கட்டிங் பிளேயர் கொண்டு பற்களை அகற்றியதாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொடூர போலீஸ் அதிகாரி ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேதாஜி சுபாஷ் சேனா, புரட்சி பாரதம் மற்றும் சில அமைப்புகள் தொடர் போராட்டங்களை அறிவித்தன.
Some of youths whose teeth were removed under police custody 👇🏽.
Nethaji Subash Sena, Puratchi Bharatham and some other organisations declared series of protests demanding action against the ASP pic.twitter.com/HWSaxmh1kF— Thinakaran Rajamani (@thinak_) March 26, 2023
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நாளை முதல் விசாரணை நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விசாரணை அதிகாரியாக சேரன்மகாதேவி உதவி ஆட்சியர் முகமது சபீர் ஆலமை நியமித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.