உலகின் முதல் திரையரங்கு, 1895ல், அமெரிக்காவில் உள்ள, பிட்ஸ்பர்க்கில் கட்டப்பட்டது. அதன் பெயர், நிகெலோடியான்.இந்தியாவின் முதல் திரையரங்கம், 1907ல், மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், ‘எல்பின்ஸ்டன் பிக்சர் பேலஸ்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.
1913ல், சென்னையில் கட்டப்பட்ட, ‘எலக்டரிக் தியேட்டர்’ தான், தமிழகத்தின் முதல் திரையரங்கு. உலக அளவில், இந்தியாவில் தான், அதிக படங்கள் வெளியாகின்றன. இந்தியா முழுவதும், 3,684 திரையரங்குகள் உள்ளன; அதில், தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மொத்தம், 756 திரையரங்குகள் உள்ளன. இதற்கு அடுத்து, ஆந்திரா – 550; கர்நாடகா – 363; தெலுங்கானாவில் – 337 அரங்குகள் உள்ளன.
யுனெஸ்கோவின் முயற்சியால், 1948ல், சர்வதேச திரையரங்க நிறுவனம் உருவாக்கப்பட்டது. யுனெஸ்கோ கலாசார துறையின் சார்பில், 1960 முதல், மார்ச், 27ல், உலக திரையரங்கு தினம் கொண்டாடப்படுகிறது; உலக திரையரங்கு தினம், இன்று.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement