இஸ்ரேலுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே யுத்தமா, அப்படி நடப்பதற்கு வாய்ப்பேயில்லையென எண்ணுபவர்கள் நம்மில் பலர் இருக்கவே செய்கின்றனர்.
ஆனால், இஸ்ரேலுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் சூழல் விரைவில் இடம்பெற்றே ஆகும் என்று இன்றைக்கும் உறுதியாக நம்புகின்றார்கள் பல இராணுவ ஆய்வாளர்கள்.
காரணம் ரஷ்யா இஸ்ரேலின் வடகிழக்கு எல்லையில் உள்ள சிரியாவில் தமது 63000 படைவீரர்களை நிலைநிறுத்தி வைத்துள்ளது. இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்ற சிரிய அரசுக்கு ஆதரவாக தமது படைவீரர்களை நிலைநிறுத்தி வைத்துள்ளது ரஷ்யா.
இந்நிலையில், ரஷ்யாவின் யுத்த விமானம் தாக்குதலுக்கு உள்ளானதற்கு இஸ்ரேல் வகை செய்யததான ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கள், இஸ்ரேல் சண்டை விமானங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டது என இப்படி இஸ்ரேலுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நேரடி மோதல்களும், மயிரிழையில் கடந்து போன ஏராளமான சம்பவங்கள் சிரியாவில் தினம் தினம் நடைபெற்று கொண்டிருக்கின்றது.
இஸ்ரேலும் ரஷ்யாவும் ஏறகனவே நேருக்கு நேர் மோதிகொண்ட வரலாறு இருப்தையும் யாரும் மறுக்க முடியாது.
உலக வரைப்படத்தில் இருந்தே இஸ்ரேல் என்ற தேசத்தை அழித்து விடுவோம் என்று கங்கணம் கட்டிகொண்டு அரபு உலகால் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேல் யுத்தத்தில் ரஷ்யா நேரடியாக பங்கேற்று இஸ்ரேலுக்கு ஏராளமான இழப்புகளை ஏற்படுத்திய வரலாறு இருக்கவே செய்கிறது.
எனவே, சோவியத் ரஷ்யாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நடைபெற்ற அந்த ரகசிய யுத்தம் பற்றியும் ரஷ்யா மற்றும் இஸ்ரேல் பற்றிய களச்சூழலை ஆராய்கிறது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
ரஷ்யாவிற்கும் இஸ்ரேலுக்குமிடையிலான இரகசிய பக்கங்கள்! மற்றுமொரு போர் வெடிக்கும் அபாயம் (VIDEO) |