கேரளா: பறந்த சிலநிமிடங்களில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் – காமாண்ட்ண்ட் உள்பட மூன்று பேர் காயம்!

கேரள மாநிலம் கொச்சி நெடும்பாசேரி விமான நிலையத்தில் இருந்து கோஸ்ட்காட்-க்கு சொந்தமான ஏ.எல்.ஹெச் துருவ் மார்க்-3 என்ற பயிற்சி ஹெலிகாப்டர் ஒன்று நேற்று மதியம் 12.15 மணிக்கு பறந்தது. அந்த ஹெலிகாப்டரில் மூன்று பேர் இருந்தனர். ஹெலிகாப்டர் சுமார் 25 அடி உயரத்தில் பறந்ததும் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மீண்டும் தரைக்குத் திரும்பியது. விமான நிலைய ஓடுதளத்தில் மிதமான வேகத்தில் மோதியபடி ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டது.

தரையிலிருந்து சிறிது உயரத்தில் இருந்து விமானம் கீழே வந்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. உடனே விமான நிலையத்தில் நின்ற தீயணைப்பு வாகனம் மூலம் ஹெலிகாப்டரில் தண்ணீர் பிச்சி அடிக்கப்பட்டது. இதனால் தீ விபத்து தடுக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் இருந்த முன்றுபேருக்கும் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காட்சி

அவர்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என சிகிச்சை அளித்த மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட விமான நிலையத்தின் அந்த ஓடுதளம் உடனே மூடப்பட்டது. பின்னர் கிரேன் உதவியுடன் ஹெலிகாப்டர் அங்கிருந்து மீட்கப்பட்டு வேறு இடத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதனால் சுமார் இரண்டு மணி நேரம் ஓடுதளம் மூடியே வைக்கப்பட்டிருந்தது. ஓடுதளம் சீரமைக்கப்பட்ட பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் கிரேன் மூலம் மீட்கப்பட்டது

பயிற்சிக்காக புறப்பட்டபோது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி உள்ளது. கமாண்டண்ட் குணால் இந்த ஹெலிகாப்டரை இயக்கியதாக கூறப்படுகிறது. டெக்னிக்கல் ஊழியர் சுனில் லோட்லா என்பவருக்கு அதிக காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் முழுமையாக வெளியாகவில்லை. அதே சமயம் இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என கோஸ்ட்கார்டு தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.