திருப்பதி தேவஸ்தான உண்டியல் வசூலாக வெளிநாடுகளில் இருந்து கடந்த ஓராண்டில் வந்துள்ள சுமார் 26 கோடி ரூபாய் பணத்தை வங்கி கணக்கில் வரவு வைக்க முடியாமல் தேவஸ்தானம் தவித்து வருகிறது. வெளிநாட்டு நாணய ஒழுங்குமுறை சட்ட விதிகளை காரணம் காட்டி திருப்பதி தேவஸ்தான கணக்கை கடந்த மூன்றாண்டுகளாக மத்திய அரசு தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளது. இதன் காரணமாக இந்திய ரூபாயில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா டாலர்கள் மற்றும் ஐக்கிய அரபு […]