தமிழ்நாட்டில் தற்போது 12 ஆம் வகுப்பு மார்ச் 13ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதே போல், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 14 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 10ம் வகுப்பு தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனிடையே தற்போது பத்தாம் வகுப்புக்கான ஹால் டிக்கெட் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுதேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று முதல் பதவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. ஹால்டிக்கெட் எனப்படும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை அரசுத்தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, https://dge.tn.gov.in என்ற இணையதளத்தில், இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த இணையதளம் மூலமாக மாணவர்கள் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்ட தகவலை கொடுத்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எவ்வாறு டவுண்லோட் செய்வது?
மேலே குறிப்பிட்ட இணையதளத்திற்கு முதலில் செல்லவும்
அந்த இணையதளத்தில் Hall Ticket என்ற வாசகத்தை கிளிக் செய்யவும்
அதில் Public Examination April 2023 என்ற பக்கம் தோன்றும்.
அதன் உள்ளே SSLC Public Examination April 2023 HALL TICKET DOWNLOAD என்பதை கிளிக் செய்யவும்.
அதில் உங்களது விண்ணப்ப எண்(application Number)/ நிரந்தர பதிவெண் (Permanent Register Number) மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்யவும்
பின்பு ஹால் டிக்கெட்டை பதிவு செய்து கொள்ளவும்.
முன்னதாக சில தினங்களுக்கு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 17ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தேர்வானது காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெற உள்ளது.