புதுடெல்லி: “டெல்லியில் நேற்று ‘சாலை பாதுகாப்பு’ என்ற கருப்பொருளின் கீழ் கார் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வைத் தொடங்கி வைத்த மக்களவை தலைவர் ஓம் பிர்லா சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.
அப்போது அவர் “இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 4 லட்சம்சாலை விபத்து நடப்பது கவலை அளிக்கிறது.
இதில் 1.5 லட்சம் பேர்உயிரிழக்கின்றனர். குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் நாட்டுக்கும் மிகப் பெரிய இழப்பு இது.
விபத்துகள் குறித்து நாம் தீவிர கவனம் செலுத்த வேண்டும். மக்கள் சாலை விதிகளை முறையாக பின்பற்றுவது அவசியம்” என்று தெரிவித்தார்.