Economic Inflation: அந்த நாட்டில் இதுவரை காணாத அளவு அதிகரித்துள்ள பணவீக்கம் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டுவிட்டது. அன்றாட வாழ்க்கையை நடத்துவதே சிரமமாகிப் போன பாகிஸ்தானில், உணவுபொருட்களின் விலை, எட்டாக்கனியாக விட்டது. வாழைப்பழம் விலை ஒரு டஜன் 500 ரூபாய் என்றால் திராட்சைப் பழத்தின் விலையை கேட்டால் தலையை சுற்றுகிறது. இது, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் மக்களின் அவலநிலையை காட்டுகிறது.
பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியால் அன்றாட வாழ்க்கைக்கு தேவையுள்ள பொருட்களின் விலைகள் உச்சத்தைத் தொட்டுள்ளது. வெங்காயத்தின் விலை 228.28 சதவீதம் அதிகரித்துள்ளது. மாவின் விலை 120.66 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
அதிலும் தற்போது, ரம்ஜான் மாதத்தை கொண்டாடும், இஸ்லாமிய நாட்டில், ரமலான் நோன்பு வைக்கும் மக்களுக்கு, அத்தியாவசியப் பொருட்களின் உச்சகட்ட விலைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் ஒரு டஜன் வாழைப்பழத்தின் விலை 500 ரூபாயை எட்டியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரு கிலோ திராட்சை ரூ.1600க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
Bananas in Banana Republic at Rs 500/Dozen itne main 2 dozen foji bikte hain Pakistan main pic.twitter.com/rsCwxgQQeB
— Arif Aajakia (@arifaajakia) March 27, 2023
அன்றாட வாழ்வில் பயன்படும் அனைத்தும் விலை உயர்ந்து வருவதால், பொதுமக்களின் வாழ்க்கை கடினமாகி வருகிறது. வெங்காயத்தின் விலை 228.28 சதவீதம் அதிகரித்துள்ளது. மாவின் விலை 120.66 வீதத்தால் அதிகரித்துள்ளது. தற்போது, பாகிஸ்தானில் பெட்ரோல் 102.84 சதவீதமும், 81.17 சதவீதமும் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க | ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை! அதிர்ச்சி கொடுத்துள்ள உகாண்டா!
இதற்கிடையில், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானை மீட்பதற்காக ஞாயிற்றுக்கிழமை லாகூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பாகிஸ்தானின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் இம்ரான் கான், பிடிஐயின் 10 அம்ச வரைபடத்தை முன்வைத்தார்.
அப்போது தனது திட்டத்தை முன்வைத்த முன்னாள் பிரதமர் இம்ரான் கான், வெளிநாட்டில் வாழும் பாகிஸ்தானியர்களின் முதலீட்டை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான திட்டங்கள் பற்றி பேசினார்.
வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்காக பாகிஸ்தானில் முதலீடு செய்ய வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும், உதவிக்காக சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) மீண்டும் அணுகியிருப்பதாகவும் கூறினார்.
மேலும் படிக்க | 5 வருட சம்பளத்தை ஊழியர்களுக்கு போனஸாக வழங்கிய நிறுவனம்!
அதேபோல, நாட்டில் இருந்து பிற நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்து நாட்டிற்கு அந்நிய செலாவணியை கொண்டு வருபவர்கள் அனைவருக்கும் உதவுவதாக தெரிவித்தார்.
கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பாகிஸ்தான், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெற விரும்புகிறது. பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து, 1.1 பில்லியன் டாலர் கடன் தொடர்பாக பாகிஸ்தானுக்கும், சர்வதேச நாணய நிதியத்த்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன.
இந்த நிதியானது IMF ஆல் அங்கீகரிக்கப்பட்ட $6.5 பில்லியன் பிணை எடுப்புப் பொதியின் ஒரு பகுதியாகும். சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளை பாகிஸ்தானின் ஏற்றுக்கொண்டால், அந்நாட்டின் பொருளாதாரம் மீண்டு வர முடியும். ஆனால், பாகிஸ்தானுக்கு கடன் வழங்க ஐஎம்எஃப் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | தாலிபான் அமைச்சரவை கூட்டத்தில் சண்டை! அமைச்சரின் கையை உடைத்த தேர்வு வாரிய தலைவர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ