7வது சம்பள கமிஷன் புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி சமீபத்தில் ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்திய மத்திய அரசு தற்போது வீட்டு வாடகை கொடுப்பனவையும் (HRA) அதிகரிக்கப் போகிறது. இதனிடையே மத்திய அரசு சமீபத்தில் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது, அதன் பிறகு தற்போது ஊழியர்களுக்கு 42 சதவீத விகிதத்தில் அகவிலைப்படி கிடைக்கும். மறுபக்கம் தற்போது வீட்டு வாடகை கொடுப்பனவையும் உயர்த்தப் போகிறது மத்திய அரசு. இது தொடர்பான அறிவிப்பை கூடிய விரைவில் மத்திய அரசாங்கம் வெளியிடும் என்று நம்பப்படுகிறது.
வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) எப்போது திருத்தப்படும்?
இந்த நிலையில் மோடி அரசு விரைவில் வீட்டு வாடகை கொடுப்பனவை அதிகரிக்க முடியும். இதற்கான அறிவிப்பை, அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது. 2023-24 நிதியாண்டின் இறுதிக்குள், அரசாங்கம் வீட்டு வாடகை கொடுப்பனவை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டினால், அரசாங்கம் HRA ஐத் திருத்தலாம்.
கடைசியாக ஜூலை 2021 இல் திருத்தப்பட்டது
முன்னதாக ஜூலை 2021 இல், மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 25 சதவீதத்தைத் தாண்டியபோது, அரசாங்கம் வீட்டு வாடகை கொடுப்பனவைத் திருத்தியது, அதன் பிறகு ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் உயர்வு ஏற்பட்டது. தற்போது, அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும்போது, அரசாங்கம் மீண்டும் ஒருமுறை வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) திருத்தலாம்.
வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) 3 சதவீதம் அதிகரிக்கும்
இம்முறை அரசாங்கம் வீட்டு வாடகை கொடுப்பனவை 3 வீதத்தால் அதிகரிக்கவுள்ளது. தற்போது, ஊழியர்களுக்கு 27 சதவீத வீட்டு வாடகை கொடுப்பனவு அதாவது, 30 சதவீதமாக வரை உயரும். ஊழியர்களின் அகவிலைப்படி 50 சதவீதமாக அதிகரிக்கும் போது இது 30 சதவீதமாக இருக்கும் என அரசிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வாடகை கொடுப்பனவு என்றால் என்ன?
வீட்டு வாடகை கொடுப்பனவு என்பது ஒரு நிறுவனம் , வாடகை வீட்டில் வசிக்கும் தனது ஊழியருக்கு ஊதியத்துடன் வழங்கும் ஒரு குறிப்பட்ட தொகையாகும். இந்த தொகைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதன் மூலம், ஊழியர் முழுமையாகவோ அல்லது பாதியாகவோ விலக்கு பெறலாம்.