காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நாமல்!


 நாட்டைப்பற்றிச் சிந்தித்து புதிய அரசியல் பயணத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு  காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பண்டாரகம தேர்தல் தொகுதியில்
இடம்பெற்ற பொதுஜன பெரமுன
காரியாலயத் திறப்பு விழாவில் கலந்து
கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

‘சிஸ்டம் சேன்ஞ்”அவசியம்தான், அதனை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதற்காக உறுதியாக நிற்பவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில், நாம் அதைச் செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்  மேலும் தெரிவித்ததாவது,

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நாமல்! | Sri Lankan Political Crisis Anti Govt Protest

ஏப்ரல் மாதம் முதலே வீடுகளைத் தாக்குவதற்கு ஆரம்பித்து விட்டனர்

‘தற்போது பெரும்
பாலானோர் பொதுஜன பெரமுன ஆதரவாளர்களைப் பயமுறுத்தி அவர்களின்
செயற்பாடுகளை நிறுத்துவதற்கு முயற்சிக்கின்றனர்.
மே மாதம் அல்ல, ஏப்ரல் மாதம் முதலே வீடுகளைத் தாக்குவதற்கு ஆரம்பித்து விட்டனர்.

ஏப்ரல் 09ஆம் திகதி
எமது அப்பாவி ஆதரவாளர்கள் காலிமுகத்திடலில் தாக்குதல் நடத்தினார்கள்
என்று கூறப்படுவதை நான் ஏற்றுக்
கொள்ளமாட்டேன்.
அவர்கள் முன்னாள் ஜனாதிபதி
மகிந்த ராஜபக்சவைச் சந்திப்பதற்கே
வருகை தந்திருந்தனர்.

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நாமல்! | Sri Lankan Political Crisis Anti Govt Protest

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள்

எவ்வாறெனினும், ஏப்ரல் மாதத்திலேயே செஹான்
சேமசிங்க, ரொஷான்ரணசிங்க, கஞ்சன
விஜேசேகர ஆகியோரின் வீடுகளைத்
தாக்க ஆரம்பித்துவிட்டனர்.
எனினும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கே இறுதி இலக்கு என்னவென்று
தெரியாதிருந்தது.

அவ்வாறு, போராட்டக்காரர்களுக்கே அதன் இலக்குத்
தெரியாமலிருந்தால், இதன் பின்னணியிலிருந்தோர் யார்? சில அரசியல்
கட்சிகளே இதற்குப் பின்னணியில்
இருந்தன என்பதை இப்போதும் நான்
பயமின்றிக் கூறுவேன்.

போராட்டம்
என்ற போர்வையில் தமது அரசியல்
அணியை கட்டியெழுப்ப முயற்சி
செய்வார்களானால் அது போராட்டக்கார்களுக்கு புரியாதிருந்தால், அது
தொடர்பில் எமக்குப் பிரச்சினையுள்ளது. நாம் இப்போது அவர்களையும்
அழைக்கின்றோம்.நாட்டைப்பற்றிச்
சிந்தித்து புதிய அரசியல் பயணத்தை
முன்னெடுத்துச் செல்வதற்கே இந்த
அழைப்பை அவர்களுக்கு நாம் விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.