வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ராகுல் எம்.பி பதவி நீக்கம் குறித்து, ‛ நான் மன்னிப்பு கேட்க வீரசாவார்கர் அல்ல ‘ எனக் கூறியிருந்தார். இதற்கு சாவர்க்கர் பற்றியும் மகாபாரதம் பற்றியும் பேசுவதை விடுத்து ராகுல் நீதிமன்ற நடவடிக்கையை நீதிமன்றம் வாயிலாகவே அணுக வேண்டும். ஆனால், குதிரைப் பந்தயத்தில் ஓடுவதற்கு ஒரு கழுதையை இழுக்கிறார்கள்? என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுல் மோடி எனும் சாதி குறித்து அவதூறாக பேசியதற்கு, நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து ராகுலை எம்.பி பதவியில் இருந்து லோக்சபா செயலர் தகுதி நீக்கம் செய்தார். இதற்கு காங்., தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ராகுல் எம்.பி பதவி நீக்கம் குறித்து டில்லியின் பத்திரிகையாளர்களிடம், ‛ இந்தியாவில் ஜனநாயகம் மீது தாக்குதல் நடந்துள்ளது. தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்காவிட்டாலும் தொடர்ந்து பணியாற்றுவேன். நான் மன்னிப்பு கேட்க சாவார்கர் அல்ல.’ எனக் கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நிருபர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது:தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தை ராகுல் சட்டபூர்வமாகத்தான் அணுக வேண்டும். சாவர்க்கர் பற்றியும் மகாபாரதம் பற்றியும் பேசுவதை விடுத்து, ராகுல் நீதிமன்ற நடவடிக்கையை நீதிமன்றம் வாயிலாகவே அணுக வேண்டும்.
ஆனால், குதிரைப் பந்தயத்தில் ஓட ஒரு கழுதையை இழுக்கிறார்கள்?. இந்த விவகாரத்தில் காங்கிரசார் பிரச்னைக்கு உகந்தவாறு செயல்பட வேண்டும். இந்திய மக்கள் நீங்கள் யார் என்பதைப் பொருத்தே உங்களை மதிப்பீடு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement