ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான அரசியல் பின்னணி குறித்து நாடு முழுவதும் மார்ச் 29 ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது. மோடி குறித்து அவதூறாக பேசியதாக சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கியதோடு ஜாமீனும் வழங்கி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு வெளியான 24 மணி நேரத்திற்குள் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளை மேற்கோள் […]