அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிரான கவிதா மனு: விசாரணை ஒத்திவைப்பு | Kavita plea against enforcement department summons: Supreme Court adjourned hearing

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: டில்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக, அமலாக்கத்துறை பிறப்பித்த சம்மனை எதிர்த்து, கவிதா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

latest tamil news

புதுடில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா, அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சுமார் 8 மணி நேர விசாரணையை அமலாக்கத்துறை நடத்தியது.

இந்த விசாரணையின் போது அமலாக்கத்துறை கைது நடவடிக்கையில் இருந்து பாதுகாப்பு வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் கவிதா மனு செய்திருந்தார்.

latest tamil news

இந்த மனு இன்று(மார்ச் 27) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு, முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,‛ மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தது. மேலும் அமலாக்கத்துறை மற்றும் கவிதா தரப்பு வழக்கறிஞர்கள் எழுத்துப்பூர்வமாக வாதங்களை சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.