இராமநாதபுரம் பாஜக மாவட்ட கமிட்டி முழுமையாக கலைக்கப்படுவதாக, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை விடுத்துள்ள அரிசிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“இராமநாதபுரம் மாவட்டத்தில், கட்சியில் நிர்வாக சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் தற்போதைய அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைக்கப்படுகிறது என்பதனை தெரிவித்து கொள்கிறேன்.
புதிய நிர்வாக நியமன விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். அதுவரை தாங்கள் அனைவரும் கட்சிப்பணியினை தொடர்ந்து செய்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு அந்த அறிவிப்பில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.