உக்ரைன் போர் சுவிஸ் மக்களுடைய எண்ணங்கள் மீது பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை சமீபத்திய ஆய்வு ஒன்றின் முடிவுகள் காட்டுகின்றன.
பெருகும் ஆதரவு
உக்ரைன் போர், ஐரோப்பிய ஒன்றியத்தைக் குறித்த சுவிஸ் மக்களின் பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவு தரும் சுவிஸ் மக்களுடைய எண்ணிக்கை பெருகியுள்ளதை சமீபத்திய ஆய்வு ஒன்றின் முடிவுகள் காட்டுகின்றன.
ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?
சுவிஸ் ஊடகம் ஒன்று சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்று, ஐரோப்பிய ஒன்றியம் மீது பாஸிட்டிவ் எண்ணம் கொண்ட சுவிஸ் மக்களுடைய எண்ணிக்கை 6 சதவிகிதம் அதிகரித்து 59 சதவிகிதமாகியுள்ளதைக் காட்டுகிறது.
60 சதவிகித சுவிஸ் மக்கள், சுவிட்சர்லாந்து ஐரோப்பிய பொருளாதார மண்டலத்தில் இணைவதற்கு ஆதரவு தெரிவிப்போம் என்று கூறியுள்ளார்கள்.
அதேபோல, ஐரோப்பிய ஒன்றிய விதிகளைப் பின்பற்றுவதில் தங்களுக்கு பிரச்சினையில்லை என்று பலர் கூறியுள்ளார்கள்.
அதே நேரத்தில், வாக்கெடுப்பு மூலம் சட்டங்களுக்கு சவால் விடுக்கும் நடைமுறை தொடரவேண்டுமென அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில், இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்குவதற்கான முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன.