வடகொரியாவில் ராணுவம் திரும்பப் பெறும்போது 653 தோட்டாக்கள் காணாமல் போனதைத் தொடர்ந்து ஒரு நகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தோட்டாக்கள் மாயம்
சீனாவில் எல்லையில் அமைந்துள்ள நகரைச் சுற்றி உள்ள பகுதியில் இருந்து, கொரிய மக்கள் இராணுவத்தின் 7வது கார்ப் படையினர் பின்வாங்கிக் கொண்டிருந்தபோது, கடந்த 7ஆம் திகதி தாக்குதல் துப்பாக்கி வெடிமருந்துகள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆரம்பத்தில் புகார் அளிக்கப்படவில்லை. ஆனால், ஆதாரத்தின்படி வீரர்கள் காணாமல் போன தோட்டாக்களைக் கண்டுபிடிக்க முயன்றனர்.
எனினும், தோட்டாக்களை கண்டுபிடிக்க முடியாததால், அவர்கள் குடியிருப்பாளர்களுக்கு அறிவித்து கடுமையான தேடலைத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
ஊரடங்கு உத்தரவு
இந்த விடயத்தில் பொலிஸாரும், இராணுவமும் விசாரணையைத் தொடங்கினர். இந்த நிலையில் 653 தோட்டாக்களை கண்டுபிடிக்க நகரம் முழுவதும் ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சுமார் 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட அந்த நகரில் அதிகாரிகள் வீடு வீடாக சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
@Reuters file Photo