புதுடில்லி, புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி திருத்தப்பட்டுள்ள என்.சி.இ.ஆர்.டி., பாடப் புத்தகங்கள், 2024 – 25 கல்வியாண்டு முதல் பள்ளிகளில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிவித்தது. இதன்படி, பள்ளி பாடத் திட்ட நடைமுறையில் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டன. பாடப் புத்தகங்களில் இதற்கான திருத்தங்கள் படிப்படியாக செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பள்ளிகளுக்கான பாடப் புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரித்து வருகிறது.
புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, திருத்தப்பட்ட பாடப் புத்தகங்கள், 2024 – 25ம் கல்வியாண்டில் இருந்து பள்ளிகளில் பயன்பாட்டுக்கு வர இருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
தேசிய பாடத் திட்ட கட்டமைப்பின்படி இந்த புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, மத்திய கல்வித்துறை அதிகாரி கூறியதாவது:
கொரோனா பாதிப்புக்கு பின் ‘டிஜிட்டல்’ வழியில் கற்றலின் தேவையை அனைவரும் நன்கு உணர்ந்துள்ளோம்.
புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ் திருத்தப்பட்டுள்ள இந்த பாடப் புத்தகங்கள், ‘டிஜிட்டல்’ வடிவிலும் கிடைக்கின்றன. அதை அனைவரும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement