மதுபோதையில் வாகனம் ஓட்டிய டாஸ்மாக் கடை வாடிக்கையாளர்களிடம் ரூ.7,53,97,000.00 வசூல் – சென்னை போலீஸ் விடுக்கும் எச்சரிக்கை!

சென்னை மாநகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில், கடந்த இரு மாதங்களில் மட்டும் ₹7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை பெருநகர காவல்துறை விபத்தை குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச் சட்டத்தை திறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்து வருகிறது. சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று மதுபோதையில் வாகனம் ஓட்டுவதாகும்.

எனவே மதுபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு சட்டத்தில் கடுமையான தடுப்பு நடவடிக்கையாக தண்டனை வழங்கப்படுகிறது. அபராதத் தொகை ரூ.10.000/- என்பதால், பலர் அபராதத்தைச் செலுத்துவதில்லை. ஆனால், நீதிமன்றத்தில் உள்ள மெய்நிகர் பிரிவிலிருந்து அவர்களின் தொலைபேசி எண்களுக்கு அழைப்பு வந்தாலும் அபாரதம் செலுத்துவதில்லை.

மேலும் 7,752 மது போதையில் வாகனம் ஓட்டிய அபராத வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன. எனவே இது போன்ற விதி மீறுபவர்களுக்கு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சென்னை பெருநகரில் 10 இடங்களில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சார்பில் அமைந்துள்ள அழைப்பு மையங்கள் (Call centers) மூலம் தகவல் தெரிவித்து, கடந்த 25.03.2023 அன்று அவர்களை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சிறப்பு நடவடிக்கையின் மூலம் 775 வழக்குகள் தீர்வுகாணப்பட்டு அபராதத் தொகையாக ரூ.80.35,500/- விதி மீறியவர்களால் செலுத்தப்பட்டன. கடந்த இரண்டு மாதங்களில் அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த 7,286 மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ.7,53,97,000/- அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.

மேலும் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம் மட்டுமின்றி, வேறு எந்த வாகனங்களாக இருந்தாலும், அசையும் சொத்துக்கள் உட்பட பறிமுதல் செய்ய நீதிமன்றங்களில் ஆணை பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. ஏற்கனவே இதுபோன்று மதுபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு 359 நீதிமன்ற ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன என்று தெரியப்படுத்திக் கொள்கிறோம்.  

(மேற்கண்ட செய்தி சென்னை போலீசாரின் செய்திக்குறிப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.