சென்னையில் கடந்த 2 மாதங்களில் மது போதையில் வாகனம் ஒட்டியர்களிடமிருந்து 7.54 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மதுபதியில் வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ.10,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அபராதம் விதித்து 14 நாட்களுக்குள் அபராதம் செலுத்தாவிட்டார் அவர்களின் வாகனம் அல்லது அசையும் சொத்துக்கள் ஏதாவது நீதிமன்றத்தின் மூலம் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களில் மதுபோதையில் வாகனம் ஒட்டிய வழக்கில் சிக்கிய 7,286 நபர்களிடமிருந்து ரூ.7.54 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதில் அபராதம் செலுத்தாத 359 நபர்களிடமிருந்து நீதிமன்றத்தின் ஆணை பெற்று அவர்களது அசையும் சொத்துக்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடவடிக்கை தொடரும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.