சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படமும், சூரி நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை படமும் மார்ச் மாத இறுதியில் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி பாக்ஸ் ஆபிசில் பெரும் மோதலை சந்திக்கவுள்ளது. பத்து தல மற்றும் விடுதலை-1 ஆகிய படங்கள் முறையே மார்ச் 30 மற்றும் மார்ச் 31-ம் தேதியில் வெளியாகவுள்ளது. சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ படத்தை ஒபேலி என் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இப்படத்தில் கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி ஷங்கர், கெளதம் வாசுதேவ் மேனன், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்திருக்கின்றனர். சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘விடுதலை‘ படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார், இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. எல்ரெட் குமாரின் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கெளதம் வாசுதேவ் மேனன், சேத்தன், இளவரசு போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
படங்களின் வெளியீட்டு நாள் நெருங்கி கொண்டிருக்கும் சமயத்தில் இரண்டு படங்களின் சென்சார் சான்றிதழ் வெளியாகியுள்ளது, படங்களில் இடம்பெற்றுள்ள ஏராளமான கெட்ட வார்த்தைகளை சென்சார் கட் செய்துள்ளது. பல இடங்களில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை கட் செய்த பிறகு சிபிஎஃப்சி பத்து தல படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் இடம்பெற்ற கெட்ட வார்த்தைகளை சென்சார் குழு நீக்கியுள்ளது. மேலும் ரத்தக்காட்சி மற்றும் தலையை துண்டிக்கும் காட்சிகளையும் நீக்க பரிந்துரைத்துள்ளது, தற்போது படத்தின் மொத்த ரன்னிங் டைம் 152.24 நிமிடங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
‘A’ Vetrimaran film #Viduthalai pic.twitter.com/882VYc1iJX
— RAJA DK (@rajaduraikannan) March 27, 2023
#PathuThala, CBFC censor rating pic.twitter.com/rjsbZdl1vX
— LetsCinema (@letscinema) March 27, 2023
இதனை தொடர்ந்து விடுதலை-1 படத்திற்கு சிபிஎஃப்சி ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது, இந்த படத்தில் விசாரணையின் போது சில பாகங்கள் காட்சிப்படுத்தப்படுவதையும், அவதூறான வார்த்தைகளை பயன்படுத்துவதையும் படத்திலிருந்து நீக்க சென்சார் குழு பரிந்துரைத்துள்ளது. தற்போது இப்படத்தின் மொத்த ரன்னிங் டைம் 145.37 நிமிடங்கள் ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.