அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வெளியாகும் நிலையில்
தனது ஆதரவாளர்களுடன் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் டிகேஎம் சின்னையா, முக்கூர் சுப்பிரமணியன், தளவாய் சுந்தரம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
தீர்ப்பு சாதகமாக வந்தால் உடனடியாக பொதுச் செயலாளர் தேர்தல் முடிவை அறிவித்து கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் ஈடுபட வேண்டும். தீர்ப்பு சாதகமாக வந்தால் பிற கட்சிகளிலிருந்தும்
, சசிகலா பக்கம் இருக்கும் ஆதரவாளர்கள், அமமுக நிர்வாகிகள் தன் பக்கம் அதிகளவில் வருவார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி நம்புவதாக கூறுகிறார்கள்.
ஒருவேளை எதிராக அமைந்தால் உடனடியாக மேல்முறையீடு தொடர்பான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓ.பன்னீர் செல்வம் நேற்று (மார்ச் 27) இரவு தேனியிலிருந்து சென்னை வந்தார். முதலில் தேனியிலிருந்து மதுரை வந்த அவர், அங்கிருந்து விமானம் மூலம் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம், பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் வழக்கில் தீர்ப்பு வெளியாக இருக்கிறதே என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு, “நீங்கள் தான் சொல்ல வேண்டும், தீர்ப்பு உங்கள் கையில் தான் இருக்கிறது” என்று சிரித்தபடி கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.