அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
சற்று முன்பு தீர்ப்பை வாசித்த நீதிபதி, அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த ஓபிஎஸ் மற்றும் ஆதரவாதர்களின் மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.
மேலும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இந்த தீர்ப்பின் காரணமாக ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் நிலை குலைந்து போய் உள்ளனர். தீர்ப்பு வந்தால் கொண்டாடலாம் என்று காத்திருந்த ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள் மனவிரத்தில் செல்லும் காட்சிகள் காணப்படுகிறது.
அதே சமயத்தில், அதிமுகவின் ஒற்றை தலைமையாக, அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.
முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகத்தில் மீண்டும் ஒரு பொற்கால ஆட்சி அமையவித்திடும் வகையில், இந்த தீர்ப்பு அமைந்துள்ளதாகவும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.