மத்திய பிரதேசத்தின் ரெய்சன் நகரில் மரம் ஒன்றுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். மரத்தை பாதுகாக்க பராமரிக்க ஆண்டுக்கு ரூ.12,00,000 செலவிடப்படுகிறது.
ரெய்சன் நகரில் சாஞ்சி ஸ்துாபா பகுதியில் உள்ள மரத்திற்குத்தான் 24 மணி நேரமும் போலீசார் துப்பாக்கிய ஏந்திய பாதுகாப்பு வழங்குகின்றனர். புத்தர் ஞானம் அடைந்த போதி மரம் இருந்ததாக நம்பப்படும் பகுதியில் கி.மு. 250ல் அசோக சக்ரவர்த்தி கோயில் எழுப்பி அந்த மரத்தை பாதுகாத்து வந்தார். பின் இலங்கையில் புத்தம் பரவிய நேரத்தில் மன்னன் தீசன் அசோக சக்ரவர்த்தியிடம் இந்த மரத்தின் கிளையை பெற்று இலங்கையில் நடப்பட்டது. அந்த மரம் பெரிதாக வளர்ந்தது. இப்போதும் அனுராதபுரத்தில் உள்ளது.
மற்றொரு புறம் ம.பி.யில் இருந்த போதி மரம் விழுந்து விட்ட நிலையில் 2012ல் இலங்கையில் இருக்கும் மரத்தின் கிளை மீண்டும் கொண்டு வந்து நடப்பட்டது. ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடந்தது. புத்தர் ஞானம் பெற்ற மரத்தின் வழி தோன்றலாக இம்மரம் கருதப்படுகிறது.
இதனால் தினமும் 4 போலீசார் ஷிப்ட் முறையில் பாதுகாப்பு கொடுக்கின்றனர். மரத்திற்கு தண்ணீர் பூச்சி மருந்து சுத்தம் செய்வது கரைப்பானுக்கு எதிரான மருந்து உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் செய்யப்படுகின்றன. இதற்காக ஆண்டுக்கு ரூ. 12,00,000 செலவாகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement