7th Pay Commission: டிஏ உயர்வுடன் அரியர் தொகையும் வரும்…மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்தடுத்து நல்ல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. மத்திய அரசு அவர்களது மனதை குளிர்விக்கும் வகையில் பல நல்ல செய்திகளை வழங்கி வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 4 சதவிகிதம் உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம் இருக்கும். இது தவிர பழைய ஊதியத் திட்டத்தில் இருக்கும் வசதிகள் மற்றும் நன்மைகளை புதிய ஓய்வூதிய முறையிலும் உருவாக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். அகவிலைப்படி தற்போது 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இது 38 சதவீதமாக இருந்தது. ஜனவரி 2023 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியின் தொகை கிடைக்கும். ஆகையால் ஊழியர்கள் மூன்று மாத டிஏ நிலுவைத் தொகையை ஒன்றாகப் பெறக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி நடந்தால், ஊழியர்களின் கணக்கில் மிகப்பெரிய தொகை ஒன்றாக கிடைக்கும்.

எத்தனை மாத டிஏ அரியர் தொகை கிடைக்கும்? 

மத்திய அரசு சில நாட்களுக்கு முன்னர் அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரித்து ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. இதன் காரணமாக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்துள்ளார்கள். இதற்குப் பிறகு, சம்பளத்தில் பம்பர் உயர்வு இருக்கும். இப்போது அரசாங்கம் இரண்டு மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கக்கூடும் என கூறப்படுகின்றது. 

உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜனவரி 2023 முதல் அளிக்கப்படும். ஆகையால் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத டிஏ அரியர் தொகையும் ஊழியர்களுக்கு சேர்ந்து கிடைக்கும். ஆகையால், மார்ச் மாத சம்பளத்தில் உயர்த்தபட்ட அகவிலைப்படியுடன், உயர்த்தப்பட்ட அகவிலைப்படியின் இரண்டு மாதங்களுக்கான நிலுவைத் தொகையும் சேர்ந்து கிடைக்கும். 

இரண்டு மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை சேர்ந்து வந்தால், அது பணவீக்கத்தால் போராடும் ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும். டிஏ நிலுவைத் தொகையாக எவ்வளவு தொகை கணக்கில் வரும்? இதற்கான கணக்கீட்டையும் இங்கே காணமால். 

அரியர் தொகையாக இந்த தொகை கிடைக்கும்

4 சதவீத அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பம்பர் பலன் கிடைக்கும். அடிப்படை சம்பளத்திற்கு ஏற்ப அகவிலைப்படி நிலுவைத் தொகை கணக்கில் வரவு வைக்கப்படும். உதாரணமாக ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 50 ஆயிரம் ரூபாயாக இருந்தால், அதில் 4 சதவீத டிஏ உயர்வின் படி சம்பளம் உயர்த்தப்படும் என நம்பப்படுகிறது. அதன்படி, உங்கள் சம்பளம் ரூ.2,000 உயரும். இரண்டு மாத டிஏ பாக்கி சுமார் ரூ.4,000 கணக்கில் வரும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.