புதுடில்லி, சிலை கடத்தல்காரர்களுடன் உள்ள தொடர்பு குறித்து சி.பி.ஐ., விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக முன்னாள் போலீஸ் அதிகாரி பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழக போலீசில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் ஐ.ஜி.,யாக இருந்தவர் மூத்த போலீஸ் அதிகாரி, ஏ.ஜி. பொன் மாணிக்கவேல். சிலைக் கடத்தல்காரர்களுடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய ஐ.காதர் பாட்சா புகார் கூறினார்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றியபோது, பழிவாங்கும் நோக்கில் தன் மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறியதாக, பொன் மாணிக்கவேலுக்கு எதிராக இவர் குற்றஞ்சாட்டினார்.
சர்வதேச சிலை கடத்தல்காரர் தீனதயாளுடன் நெருக்கமாக இருந்த பொன் மாணிக்கவேல், அவரது உதவியுடன் சில சிலைகளை கடத்தியுள்ளதாகவும் புகார் கூறினார்.
இது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடத்தல்காரர்களுக்கும், பொன் மாணிக்கவேலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து விசாரிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் கிருஷ்ண முராரி, சஞ்சய் கரோல் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்து அமர்வு உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement