கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மிக நீண்ட சட்டப் போராட்டங்கள் நடைபெற்றன. முதலில் அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு இன்று தீர்ப்பளித்தார்.
மனுக்கள் தள்ளுபடி
மேலும் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பித்தார். இதன்மூலம் அதிமுகவின் பொதுச் செயலாளராக
போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான கையொப்பம் இட்டு சான்றிதழை பெற்றுக் கொண்டதன் மூலம் ”பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி” என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவில் திருப்புமுனை
இது அதிமுகவின் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. நீதிமன்றத்தை பொறுத்தவரை எப்போதுமே Functional Deadlock வராமல் பார்த்துக் கொள்ளும். அதாவது, ஜனநாயக நாட்டில் ஒரு கட்சியின் செயல்பாடுகள் எந்த வகையிலும் முடங்கி விடக் கூடாது. எனவே அதற்கேற்ப எடுக்கப்பட்ட நடவடிக்கையாக சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது.
ஓபிஎஸ் ஏமாற்றம்
இந்த தீர்ப்பால்
தரப்பு மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளது. அவர்கள் முன்பிருக்கும் வாய்ப்பு என்பது சட்டப் போராட்டம். அதுமட்டுமின்றி இன்று வழங்கப்பட்டிருப்பது ஒரு சிவில் வழக்கில் இடைக்கால உத்தரவு. எனவே தாராளமாக மேல்முறையீட்டிற்கு செல்லலாம். அப்படி செய்யவில்லை எனில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு வரும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
மேல்முறையீடு
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உடனடியாக மேல்முறையீடு செய்துள்ளது. நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷாஃபிக் ஆகிய இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதேசமயம் எந்த ஒரு கட்சியின் எதிர்காலத்தையும் நீதிமன்றம் முடிவு செய்ததாக வரலாறுகள் இல்லை.
மக்களின் தீர்ப்பே இறுதியானது
மக்கள் தான் அதை முடிவு செய்ய வேண்டும். அப்படித்தான் இதுவரை நடந்திருக்கின்றன. எனவே ஓபிஎஸ் மக்கள் மன்றத்திற்கு சென்று நியாயம் கேட்பது தான் சரியாக இருக்கும் என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு குறித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், இந்த தீர்ப்பு நாங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை.
இதை கட்சியினரும் ஏற்க மாட்டார்கள், மக்களும் ஏற்க மாட்டார்கள். இது இறுதியானது அல்ல. எனவே மேல்முறையீட்டிற்கு செல்வோம். அதில் நாங்கள் வெற்றி பெறுவோம். தலைவர் எம்.ஜி.ஆர் இயற்றிய சட்ட விதிகள் எங்களுக்கு சாதகமாக இருக்கின்றன. தற்காலிகமாக எடப்பாடி தரப்பு மகிழ்ச்சியில் உள்ளனர். இது நீடிக்காது என்று தெரிவித்தார்.