ரஷ்யாவின் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்: ஜப்பான் கடலில் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை


 ஜப்பான் கடலில் உள்ள போலி இலக்கை நோக்கி ரஷ்ய கடற்படை சூப்பர்சோனிக், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வீசியதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. 

12 ஆளில்லா விமானங்கள்

திங்கள்கிழமை பிற்பகுதியில் உக்ரைன் தலைநகர் கீவ் அருகே குறைந்தது 12 ரஷ்ய ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அப்பகுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவின் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்: ஜப்பான் கடலில் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை | Putins Plan For Torpedoes In Pacific Ocean@afp

உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதாக உறுதி செய்யப்படவில்லை, ஆனால் ஸ்வியாடோஷினோ பகுதியில் உள்ள ஒரு கடையில் குப்பைகள் விழுந்ததில் தீப்பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிவ் இராணுவ நிர்வாகத்தின் தலைவரான செர்கி பாப்கொ(Serhiy Popko), ரஷ்யா ஒரு டஜன் ட்ரோன்களை கிய்வ் நோக்கி ஏவியது, ஆனால் உக்ரைன் “அனைத்து எதிரி இலக்குகளையும்” அழித்துவிட்டது எனக் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்: ஜப்பான் கடலில் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை | Putins Plan For Torpedoes In Pacific Ocean@afp

ஈரானில் தயாரிக்கப்பட்ட மொத்தம் 15 ஷாஹித் ஆளில்லா விமானங்கள் உக்ரைனில் ஒரே இரவில் ஏவப்பட்டதாக இன்று காலை தெரிவிக்கப்பட்டது. அதில்  14 விமானங்களை உக்ரைன் படைகள் சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“தரவுகளின்படி, இந்த நேரத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை,” என்று பாப்கோ செய்தி தொடர்பாளர் மூலம் தெரிவித்துள்ளார், இருப்பினும் தகவல் தெளிவுபடுத்தப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

ஜப்பான் கடலில் மாஸ்கோ சூப்பர்சோனிக் ஏவுகணை

ஜப்பான் கடலில் உள்ள போலி இலக்கை நோக்கி ரஷ்ய கடற்படை சூப்பர்சோனிக், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வீசியதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

ரஷ்யாவின் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்: ஜப்பான் கடலில் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை | Putins Plan For Torpedoes In Pacific Ocean@reuters

ஒரு அறிக்கையில், மோஸ்கிட் குரூஸ் ஏவுகணைகள் பசிபிக் கடற்படையின் ஏவுகணைக் கப்பல்களால் ஏவப்பட்டதாக கூறியுள்ளது.

“சுமார் 100 கிலோமீட்டர் (62.14 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இலக்கு, இரண்டு மோஸ்கிட் க்ரூஸ் ஏவுகணைகளின் நேரடி தாக்குதலால் வெற்றிகரமாக தாக்கப்பட்டது” என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

[EB64LA}@ap

P-270 Moskit ஏவுகணை சோவியத் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு நடுத்தர தூர சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை ஆகும், இது ஒரு கப்பலை 75 மைல்கள் வரை அழிக்கும் திறன் கொண்டது.

இரண்டு ரஷ்ய குண்டுவீச்சு விமானங்கள், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டவை, ஏழு மணி நேரத்திற்கும் மேலாக ஜப்பான் கடல் மீது பறந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, “திட்டமிட்ட  அனுப்ப பட்ட விமானம்” என்று ரஷ்ய ராணுவ தரப்பு கூறியுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.