வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சண்டிகர்: பயங்கரவாத போதகரும், காலிஸ்தான் ஆதரவாளருமான அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீசார் தேடி வரும்நிலையில், பிபிசி செய்தி நிறுவனத்தின், ‘பிபிசி பஞ்சாபி’ என்ற அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளரும், பயங்கரவாத போதகருமான அம்ரித்பால் சிங், கடந்த மாதம் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனை சூறையாடினார். இதையடுத்து, அம்ரித்பால் மற்றும் கூட்டாளிகள் மீது வழக்குபதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அவர் நேபாளம் நாட்டிற்கு தப்பி சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்திய பாஸ்போர்ட் அல்லது போலி பாஸ்போர்ட் வாயிலாக வேறு நாட்டுக்கு செல்வது தெரியவந்தால், அவரை உடனடியாக கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதரகம், நேபாள குடியேற்றத் துறைக்கு வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், பிபிசி செய்தி நிறுவனத்தின், ‘பிபிசி பஞ்சாபி’ என்ற அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு திடீரென முடக்கப்பட்டுள்ளது. அரசின் சட்ட கோரிக்கையை அடுத்து பிபிசி பஞ்சாபி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கத்திற்கான சட்ட கோரிக்கை டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு தரப்பில் வழங்கப்பட்டதா அல்லது பஞ்சாப் அரசு தரப்பில் வழங்கப்பட்டதா என்ற விவரம் வெளியாகவில்லை. அம்ரித்பால் சிங்கை போலீசார் தேடி வரும் நிலையில் பஞ்சாபை சேர்ந்த பத்திரிகையாளர்களின் டுவிட்டர் கணக்குகளை சில நாட்களாக பஞ்சாப் அரசு முடக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement