வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: எம்.பி.என்ற முறையில் வழங்கப்பட்ட அரசு பங்களாவை விதிக்குட்பட்டு காலி செய்வதாக, ராகுல் அறிவித்துள்ளார்.
ராகுல் எம்.பி பதவி தகுதி நீக்கத்தை தொடர்ந்து, டில்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என லோக்சபா செயலாளர் நோட்டீஸ் அனுப்பினார். மேலும், நோட்டீசில் ‛ஒரு மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும்’ எனவும் கூறினார்.
மகிழ்ச்சியான தருணம்
இது குறித்து ராகுல் லோக்சபா செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: 20 ஆண்டுகளாக அரசு பங்களாவில் இருந்த என்னுடைய மகிழ்ச்சியான தருணங்களை மறக்க முடியாது. எந்த பாரபட்சமும் இல்லாமல் உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களுக்கு கட்டுப்படுவேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கண்டனம் தெரிவித்த கார்கே:
இது குறித்து காங்., தலைவர் கார்கே நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ராகுலை பலவீனப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றனர். அவரை பயமுறுத்தும், அரசின் அணுகுமுறையை கண்டிக்கிறேன் அவர் பங்களாவை காலி செய்தால், அவரது தாயுடனோ அல்லது என்னுடவோ இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement