தென்காசி: சங்கரன்கோவில் அருகே ஆம்லேட் சரியில்லாததால் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட ராணுவ வீரர் உட்பட 4 பேர் எஸ்ஐயை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கூடுதல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு, எஸ்ஐயை தாக்கிய ராணுவ வீரர் உள்பட 4 பேரை போலீசார் சாலையில் தரதரவென இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓட்டல் கடைகளில் சாப்பாடு சரியில்லை என்றால் எவ்வளவு பெரிய சண்டைகள் வரும் என்பதை நாம் கேள்விபட்டிருப்போம். அதுவும் குடி போதையில் யாராவது வந்தால், கலவர பூமியாகவே மாறிவிடும். அப்படி நடந்த சண்டைகள் தமிழ்நாட்டின் வரலாற்றில் பலமாகவே எழுதலாம். பல வன்முறை சம்பவங்கள் சாராயக்கடைக்கு போய்விட்டு கையோடு சாப்பாட்டுக்கடைக்கு வரும் போது தான் நடந்திருக்கிறது. அப்படித்தான் தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே நடந்துள்ளது.
சாப்பிட்ட சென்றனர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பனவடலிசத்திரம் கிராம் உள்ளது. இங்குள்ள ஒரு ஓட்டலுக்கு ராணுவ வீரர் முத்துப்பாண்டியும் அவரது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து சாப்பிடச் சென்றாக கூறப்படுகிறது. அப்போது, அவர்கள் 4 பேரும் மது போதையில் இருந்ததாக அங்கிருந்தவர்களால் சொல்லப்படுகிறது.
ராணுவ வீரர்
இந்நிலையில் முத்துப்பாண்டியும் அவரது நண்பர்களும் ஓட்டலில் போட்ட ஆம்லெட் சரியில்லை எனக்கூறி நாற்காலிகளை உடைத்து அவர்கள் ரகளையில் ஈடுபட்டார்களாம். இதனால் பயந்து போன ஓட்டல் கடை நடத்துபவர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
விரைந்த போலீஸ்
தகவலறிந்து சென்ற காவல் உதவி ஆய்வாளர் உட்பட 2 போலீசார் முத்துப்பாண்டியையும் அவரது நண்பர்களையும் சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். அப்போது, 4 பேரும் சேர்ந்து காவலர்களை தாக்கி புரட்டி எடுத்து அடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டனர்.
விசாரணை
போலீசார் அனைவரையும் சேர்ந்து சண்டையிட்ட முத்துப்பாண்டி உள்பட நான்கு பேரையும் கைது செய்தனர். 4 பேரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள் காயமடைந்த எஸ்.ஐ. மற்றும் காவலர் ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவலர்களை ராணுவ வீரர் உட்பட 4 பேர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.