அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொது செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வந்தது. தீர்ப்பை வாசித்த நீதிபதி கே.குமரேஷ்பாபு, ஓ. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும், பொதுச்செயலாளர் தேர்தலும் செல்லும் என்று உத்தரவிட்டார். இதனால் அதிமுக-வின் பொதுச்செயலாளராக
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து
தலைவர் திருமாளவன் சூழ்ச்சமாக தனது பாணியில் கருத்து தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த தலித் கிறித்தவ தேசிய சபை போராட்டத்தில் பங்கேற்க சென்ற எம்பி திருமாவளவன் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுகவின் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதையும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை குறித்தும் கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு திருமாவளவன் கூறியது
பாஜகவினரின் அணுகுமுறை வைத்து பார்க்கும்போது ஓ. பன்னீர்செல்வமா அல்லது எடப்பாடி பழனிசாமியா என்று ஒப்பிட்டு பார்த்து எடப்பாடி பழனிசாமியை பாஜக தேர்ந்தெடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டப்போராட்டம் செய்து இந்த தீர்ப்பை பெற்றதை போல தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின்னணியில் பாஜக, சங்பரிவார் அமைப்புகள் இருப்பதை மறுக்கமுடியாது.
எடப்பாடி பழனிசாமி தற்போது அதிகாரபூர்வமாக அதிமுகவின் பொதுச்செயலாளராக பணியாற்ற வாய்ப்பை பெற்றுள்ளார். அவருக்கு நான் தோழமையோடு விடுக்கும் வேண்டுகோள்; எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் சமூக நீதிக்காக குரல் கொடுத்தவர்கள். அந்த சமூக நீதி கொள்கைக்கு நேர் எதிரியாக இருக்கக்கூடிய பாஜகவை தூக்கி சுமப்பது என்பது இரு தலைவர்களுக்கும் கருத்தியல் ரீதியாக செய்கிற மாபெரும் துரோகம் ஆகும். எனவே இரு தலைவர்களின் வழியில் சமூக நீதிக்கான ஒரு இயக்கமாக அதிமுகவை தொடர்ந்து நடத்துவதற்கு துணிந்து முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பாஜகவை தூக்கி சுமப்பது அதிமுகவுக்கும் நல்லதல்ல, தமிழ்நாட்டுக்கும் நல்லதல்ல. தமிழ்நாட்டில் பாஜக கல்லூன்றிவிட்டால் சமூக நல்லிணக்கம் ஒட்டுமொத்தமாக பாதிப்படையும். மதத்தின் பெயரால் வன்முறை தொடரும். இத்தனை ஆண்டுகாலம் நாம் காப்பாற்றி வந்த சமூக நீதிக்கான மரபுகள், அழித்தொழிக்கப்படும். எனவே, இதையெல்லாம் கருத்தில்கொண்டு எடப்பாடி பழனிசாமி அரசியல் நிலைப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்; காய்களை நகர்த்த வேண்டும் என்று சமூக நீதி போராட்ட களத்தில் இருக்கக்கூடியவன் என்ற உரிமையில் இந்த வேண்டுகோளை வைக்கிறேன் என்றார்.