காங்கோவில் தங்கச் சுரங்கத்தில் சிக்கிய 9 தொழிலாளர்களை வெறும் கைகளால் காப்பாற்றிய மனிதனை மாவீரனாக கொண்டாடியுள்ளனர்.
9 தொழிலாளர்களை உயிருடன் மீட்ட மனிதர்
காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஒரு தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததால், அதனுள்ளே பல சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். ஆனால், அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதால் மிகப்பெரிய சோகம் தவிர்க்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலாக ஒரு வீடியோ காட்சியில், மேலே மண்ணும் பாறைகளும் சரிந்துகொண்டிருக்கும் ஒரு தங்கச் சுரங்கத்திற்கு உள்ளே இருந்து பல ஆண்கள் ஒரு குறுகிய நுழைவாயில் வழியா ஊர்ந்து வெளியே வருவதைக் காணலாம்.
Screenshot Twitter @@PerneInAGyre
சூப்பர் ஹீரோ…
ஒரு நபர் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான விளிம்பில் நின்றபடி, தனது வெறும் கைகளைப் பயன்படுத்தி அந்த சிறிய நுழைவாயிலை மூடிய மண்ணை அகற்றி சக தொழிலாளர்கள் தப்பிக்க உதவிசெய்கிறார்.
சிக்கிய சுரங்கத் தொழிலாளர்கள் ஒவ்வொருவராக வெளியேறுவதைக் கண்ட பார்வையாளர்கள் மகிழ்ச்சியில் கூச்சலிட்டனர்.
அவரது முயற்சியால், சிக்கிய ஒன்பது சுரங்கத் தொழிலாளர்களும் அந்த ஓட்டையிலிருந்து உயிருடன் வெளியே வருவதைக் காணலாம்.
Yesterday in DR Congo at around 2pm: artisanal copper miners saving each in Luwowo, in the Muvumboko neighbourhood pic.twitter.com/oCY2qplWKH
— Nicolas Niarchos (@PerneInAGyre) March 25, 2023
அவரது வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் விரைவாக வைரலானது. சக ஊழியர்களைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரைப் பணயம் வைத்ததற்காக பலர் அவரை சூப்பர் ஹீரோ என்று பாராட்டினர்.
அடிக்கடி நடக்கும்
காங்கோ சுரங்கங்களில் அடிக்கடி சுரங்கப்பாதை இடிந்து விழுவதற்கு பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் சரியான உபகரணங்களின் பற்றாக்குறை முக்கிய காரணிகள் ஆகும்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சுரங்கத் தொழிலாளர்கள் உயிர் பிழைப்பதற்கான குறைந்தபட்ச வாய்ப்புகளுடன் நிலத்தடியில் சிக்கிக் கொள்கிறார்கள். பலர் தங்கள் உயிரையும் இழந்துள்ளனர்.