மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் லக்கன் சிங் யாதவின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவில் கலந்து கொண்ட ராஷ்டிரிய ஜனதா தளத்தின் எம்.எல்.ஏ. பாய் வீரேந்திரா பேசுகையில் கூறியதாவது: பா.ஜ.க.வை எதிர்த்து போராட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும்.
2024ம் ஆண்டு பா.ஜ.க.வுக்கு எதிரான எதிர்க்கட்சி போராட்டத்துக்கு நிதிஷ் குமார் தலைமை தாங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சூனிய வேட்டையின் ஒரு பகுதியாக புலனாய்வு அமைப்புகள் மூலம் தேஜஸ்வி யாதவ் பா.ஜ.க.வால் குறிவைக்கப்படுகிறார். எனது பார்வையில், ராகுல் காந்திக்கு நடந்தது முடிவல்ல. அது ஆரம்பமாகத்தான் இருக்க முடியும். எனது தலைவர் தேஜஸ்வி யாதவ் ஏற்கனவே துன்புறுத்தலை எதிர்கொள்கிறார். நான் வரிசையில் அடுத்ததாக இருக்கலாம்.
எனவே ஜனநாயகத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் இறங்க வேண்டிய நேரம் இது. அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதன் மூலம் ஒரு தொடக்கத்தை உருவாக்க முடியும். அதன் பிறகு எங்கள் முதல்வர் (நிதிஷ் குமார்) தேசத்தை போராட்டத்தில் வழிநடத்தட்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.