கீவ்: உக்ரைன் கிழக்கில் உள்ள ஸ்லோவியன்ஸ்க் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில், 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 29 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டு பிப். 24ல் உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை துவக்கியது. ஒராண்டு மேலாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் பெரும் உயிரிழப்பையும், பொருள் சேதத்தையும் சந்தித்து வருகிறது. இதையடுத்து ரஷ்யா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை அறிவிப்பால் ரஷ்ய பங்கு சந்தை சரிவை சந்தித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.
இந்நிலையில் உக்ரைன் கிழக்கில் உள்ள ஸ்லோவியன்ஸ்க் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. நகரின் கட்டங்கள் மீது 2 ஏவுகணைகள் தாக்கியதில், 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 29 பேர் காயமடைந்தனர். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, உக்ரைனில் முக்கிய நகரங்களை அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மேலும் உக்ரைனை முழுமையாக கைப்பற்ற தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement