காசநோய் என்னும் பயங்கர நோயால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மீண்டும் உயரத் துவங்கியுள்ளதாக சுகாதார அலுவலர்கள் எச்சரித்துள்ளார்கள்.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்
உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிரிவு, 2021ஆம் ஆண்டு இந்த காசநோய் (tuberculosis) காரணமாக 27,300 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2020ஆம் ஆண்டில் 27,000 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது.
இங்கு, 2021இல் 300 பேர் கூடுதலாக காசநோய்க்கு பலியாகியுள்ளார்கள் என்பதை விட, கடந்த 20 ஆண்டுகளாக காசநோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்த நிலையில், தற்போது அது மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது என்பதுதான் குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.
Credit: Getty
காரணம் என்ன?
கோவிட் காலகட்டத்தில், மக்களால் சரியான வகையில் காசநோய் பரிசோதனை செய்துகொள்ளவோ, அல்லது அதற்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளவோ முடியாமல் போனதுதான் இப்படி காசநோய்க்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் என மருத்துவத்துறை நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் எவை தெரியுமா?
இந்த மோசமான உயிர்க்கொல்லி காசநோய்க்கு அதிகம்பேரை பலிகொடுத்துள்ள நாடுகள் எவை தெரியுமா? ரஷ்யாவும், உக்ரைனும்!
ஆம், ரஷ்யாவில் சுமார் 4,900 பேரும், உக்ரைனில் சுமார் 3,600 பேரும் காசநோய்க்கு பலியாகியுள்ளார்கள்.