ரஷ்யா- உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்கு கொண்டு வருவேன் :| Again, the president would end the Russian-Ukraine war in 24 hours:

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: அமெரி்க்க அதிபராக என்னை மீண்டும் தேர்வு செய்தால், ரஷ்யா-உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்கு கொண்டு வருவேன் என முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்தாண்டு பிப்., 25ல் ரஷ்யா போர் தொடுத்து. ஓராண்டை தாண்டிய நிலையில், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

latest tamil news

இந்தப்போரால், சர்வதேச அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக திரண்டன. ஆனால், இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும்படியும், பேச்சு நடத்தி பிரச்னைகளுக்கு தீர்வு காணும்படியும், பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட உள்ளார். இன்று செய்தி நிறுவனத்திற்கு டிரம்ப் அளித்த பேட்டி, அதிபர் தேர்தலில் நான் வேட்பாளராக போட்டியிட உள்ளேன். அதிபராக நான் மீண்டும்தேர்வு செய்யப்பட்டால், முதற்கட்டாமாக ரஷ்ய அதிபர் புடினையும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியையும் நேரில் வரவழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி அமைதி உடன்படிக்கை ஏற்படுத்தி 24 மணி நேரத்தில் போரை முடிவுக்கு கொண்டு வருவேன். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.