வீட்டில் ஹோமம் செய்யலாமா? செய்தால் என்ன நடக்கும் – இரா.விஜயகுமார் நேர்காணல்


வீட்டில் ஹோமம் செய்யலாமா? செய்தால் என்ன நடக்கும் என்று ஆன்மீக பேச்சாளர் இரா.விஜயகுமார் நேர்காணலில் பல சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில்,

அன்றாட வாழ்விலேயே நாம் நல்ல காரியம் தொடங்குகிறோம். ஒரு வீடு கட்டப்போகிறோம். புதிதாக தொழில் தொடங்குகிறோம் அப்படியென்றால், முதலில் நாம் பண்ணக்கூடிய விஷயம் என்னவென்றால் கணபதி ஹோமம் செய்கிறோம்.

சமீப காலமாக நிறைய பேர் என்னிடம் கேட்பது என்னவென்றால், இந்த ஹோமங்கள் எதற்காக செய்ய வேண்டும்.

இதை எதற்காக செய்ய வேண்டும் என்றால், நம்முடைய கலாச்சாரம் என்பது பஞ்ச பூத வழிபாடுகளுடைய அடிப்படையை கொண்டது. நீங்கள் எதை எடுத்துக் கொண்டாலும், கோவில் எடுத்தாலும் சரி, அன்றாட வாழ்க்கையில், தர்மம் வகுத்து கொடுக்கக்கூடிய ஒவ்வொரு வழியிலும், இந்த பஞ்ச பூத வழிபாடு என்பது எல்லா பக்கமும் பார்க்க முடியும்.

நீங்கள் பொங்கல் அன்று பார்த்தீர்கள் என்றால் சூரிய வழிபாடு ஒரு கட்டத்தில் அதுவும் பஞ்சபூத வழிபாடு.

astrology-josiyam-ibc-bhakthi

கோவிலுக்கு சென்றால், திருமாலுக்கு நீரால் வழிபாடு, சிவனுக்கு தீபத்தால் வழிபாடு.. இப்படி ஒவ்வொன்றும் பஞ்ச பூத வழிபாட்டை ஒட்டியே அமைந்து வந்தது. நெருப்பின் வடிவாக இறைவனை வணங்கக்கூடிய ஒரு ஆற்றல் மிக்க செயல்தான் இந்த ஓமம் என்பது.

ஓமம் இரண்டு காரணங்களுக்காக நடத்தப்படும்.

ஒன்று குறிப்பிட்ட குடும்பத்திற்காகவோ அல்லது எனக்காகவோ, என்னுடைய தேவைக்காகவோ இறைவனிடத்தில் வேண்டி, என்னால் முடிந்த அளவிற்கு ஒரு அர்ப்பணிப்பை கொடுத்து, இறைவா இதையெல்லாம் வேண்டும் என்று கேட்பது. அது என்னுடைய தேவைக்காக. இது ஒரு வகையான ஓமங்கள். இதையெல்லாம் வீட்டில் செய்வது.

கோவிலுக்கு சென்றால், அங்கு நடக்கக்கூடிய அத்தனை ஹோமங்களுக்கும் ஒரே ஒரு காரணம் தான். உலகம் நன்றாக இருக்க வேண்டும். உலகத்தில் இருக்கும் எல்லா உயிர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று கோவிலில் செய்வதுதான் கோவில் ஹோமங்கள்.

வீட்டில் செய்யக்கூடிய ஹோமங்களுக்கு சில முறைகள் இருக்கிறது.

அதில் செய்யக்கூடிய விஷயங்களில் பயன்படுத்தக்கூடிய விஷயங்கள் ஆயிரம் அர்த்தங்களும், பலன்களும் இருக்கிறது.

முதலில் நீங்கள் ஹோமம் செய்ய வேண்டும் என்றால், அந்த ஹோமத்தில் பயன்படுத்தக்கூடிய பொருள், எந்த ஹோமம் செய்வது என்றால் முதலில் நெய்யிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.

ஏன் நெய்யை பயன்படுத்த வேண்டும்?

பால் கெட்டுப்போகக்கூடிய பொருள். கெட்டுப்போகக்கூடிய பொருள் கெடாத நெய் என்ற ஒரு பொருளை வைத்துள்ளது.

பாலை பக்குவப்படுத்தி, அதை தயிராக்கி, அதை வெண்ணெய்யாக்கி, அதிலிருந்து நெய்யை எடுக்கிறோம்.

நம் உடம்பு கெட்டுப்போகக்கூடிய உடம்பு. நம் உடம்பில் பரம் ஆத்மா என்று சொல்லக்கூடிய நெய் இருக்கிறது. அதை பக்தியால் பக்குவப்படுத்தி அந்த நெய்யை எடுத்து, அந்த ஹோம குண்டலத்தில் எரியக்கூடிய நெருப்பானது இறைவனுடைய வடிவம்.

இது ஆத்மா, அது பரமாத்மா. இரண்டும் ஒன்றாக கலக்க வேண்டும். இது ஒரு உன்னதமான தத்துவம்தான் அந்த நெய்யைக்கொண்டு ஹோமம் செய்வது.

ஒவ்வொரு தடவையும் சொல்லும்போது சுவாஹா.. சுவாஹா… என்று சொல்வார்கள். அதன் தத்துவம் என்னவென்றால், உனக்கு அர்ப்பணிக்கிறேன்.

உனக்கு அர்ப்பணிக்கிறேன் இது என்னுடையது அல்ல, இது உன்னுடையது.

நாம் பிறக்கும்போது சரி, போகும்போதும் சரி கையில் எதையுமே கொண்டு வரப்போவது இல்லை. கொண்டு போகப்போவது இல்லை. இவை அத்தனையுமே இறைவன் நமக்கு இட்ட பிச்சை. இதை உணர வேண்டும். இதற்காகத்தான் சுவாஹா என்று சொல்வது வழக்கத்திலேயே கொண்டு வரப்பட்டது.

குச்சி ஏன் பயன்படுத்த வேண்டும்?

ஒவ்வொரு மரத்திற்கும், ஒவ்வொரு தன்மை இருக்கிறது. ஆற்றல் இருக்கிறது. இந்த ஆற்றல் நம்மிடம் வர வேண்டும் என்பதற்காக அதற்குண்டான மந்திரங்களைச் சொல்லி, நெய்யில் தொட்டு மனப்பூர்வமாக இறைவனிடத்திலேயே கொடுப்பது என்பது ஒரு விஷயம்.

மந்திரம் எதற்காக பயன்படுத்த வேண்டும்?

ஹோமத்தில் எத்தனை முறை மந்திரத்தை சொல்கிறோம். 108 முறை சொல்ல வேண்டும் என்பது முறை. தற்போது இதெல்லாம் நடப்பது இல்லை. இனிமேல் ஹோமம் செய்யும்போது, ஒரு தடவைக்கு, இரு தடவை பெரியோர்களை கேட்டு, செய்தால் நினைத்ததைவிட பல மடங்கு நன்மையையும், பல மடங்கு ஆற்றலையும் நமக்கு கொடுக்கும் எந்த விதமான சந்தேகமும் கிடையாது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.