அழகு கலையை ஏராளமான பெண்கள் சிறு தொழிலாக தங்கள் வீட்டுகளில் முன் வந்து செய்து வருவதால், அந்த குடும்பமே முன்னேறி வரும் இக்கால கட்டத்தில், மசாஜ் சென்டர், ஸபா நடத்துவதாக சமூகத்தில் பெண்கள் மீது தவறான கண்ணோட்டம் உள்ளது. அதனை சமூகம் மாற்றி கொள்ள வேண்டும். மேலும் அழகு கலை நிபுணர்களை நலவாரிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என அழகுக்கலையின் தொழில் நுட்பங்களை கல்லூரி மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் நாகர்கோவிலில் நடைப்பெற்ற நிகழச்சியில் அழகு கலை சங்க மாவட்ட நிர்வாகி கோரிக்கை வைத்துள்ளார்.
வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கணக்கில் கொண்டு சுய தொழில் தொடங்கவும், அழகுக்கலையின் தொழில் நுட்பங்களை பெண்கள் அறிந்து கொள்ளவும் மாவட்ட பெண்கள் அழகு கலை சங்கத்தினர் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 250 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுக்கு இலவச அழகு கலை பயிற்சி வகுப்பு நடத்தினர்.
வேலையில்லா பட்டதாரி பெண்கள் கூட அதிக அளவில் இந்த தொழிலில் இணைந்துள்ளதால் தமிழக அரசு அழகு கலை நிபுணர்களை நலவாரிய திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும் என்றார். பெண்களை அழகுப்படுத்துவதில் புதிய தொழில்நுட்பங்கள் முகத்தில் கருப்பு புள்ளிகளை மாற்றுவது, சிகை அலங்காரம், அழகு கலையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன கருவிகள் மற்றும் பொருட்கள் குறித்து மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. இதனை அடுத்து அழகுக்களை பெண்கள் சங்க நிர்வாகிகள் கூறும்போது அழகு கலை தொழிலில் முன்பை விட ஏராளமான பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மசாஜ் சென்டர்களுடன் ஒப்பிட்டு போலீசார் சில வேலைகளில் அழகு கலை நிறுவனங்களில் தவறான கண்ணோட்டத்தை அணுகுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மசாஜ் என்பது ஸ்பா என்ற வகையில் உள்ளது. ஆனால் அழகு கலை என்பது அப்படி இல்லை. இது முழுக்க முழுக்க பெண்களை அழகு படுத்துவது சம்பந்தமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.