தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ம் தொடங்கிய நிலையில், ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து மே 5ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம் ஆசிரியர்களுக்கு பல்வேறு விதிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் விடைத்தாள் திருத்தும் போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் அவ்வாறு செல்போன் கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு வெளி ஆட்கள் யாரும் வரக்கூடாது. மேலும் அடிக்கடி வெளியில் செல்வது, காலதாமதமாக வருவது தவிர்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.