ஓபிஎஸ் தொடர்ந்து உள்ள மேல்முறையீட்டு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டும் என்று, ஓ பன்னீர்செல்வம் மற்றும் மனோஜ் பாண்டியன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அண்மையில் அறிவிக்கப்பட்ட பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அளித்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இதனை அடுத்து உடனடியாக ஓபிஎஸ், சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில், தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை ரத்து செய்ய கோரி மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் நாளை இந்த வழக்கை விசாரணை செய்ய உள்ளது.
இதற்கிடையே அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இன்று பதவி ஏற்று கொண்டுள்ளார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தனிநீதிபதியின் தீர்ப்புக்கு எதிர்க்க தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு வரும் வரை, அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை செயல்பட தடை விதிக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
மேலும் ஓபிஎஸ் ஆதரவால் மனோஜ் பாண்டியன் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்களின் இந்த மனுக்களில், ‘தனி நீதிபதியின் உத்தரவு முன்னுக்குப் பின் முரணாக உள்ளதாகவும், கட்சி விதிகளுக்கு எதிராக உள்ளதாகவும், எனவே தனிநீதி உத்தரவுக்கு தடை கூறும் இந்த மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு பிறப்புக்கு பிறப்பிக்கும் வரை, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி நாளை காலை ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்தியலிங்கம் மற்றும் ஜே சி டி பிரபாகர் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வழக்கு நாளை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்படலாம் அல்லது ஓபிஎஸ் தரப்பின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படலாம்.